குரு வணக்கம்:- தந்தையில் பிறந்து - தாயில் மலர்ந்து - குருவால் உணர்ந்து தெய்வத்தை அறிந்து - தெய்வமாய் மாறுவது, தெளிவான, தெளிவாலே.

Wednesday, August 22, 2012

குரு என்பது பதவியா ? பட்டமா ? படிப்பா ?


சில மார்கங்களில் குரு என்பது பதவியாக இருந்து வருகிறது. பணத்திற்காகவும், சபைகளின் வளர்ச்சிக்காவும் தகுதியும் திறனும் சிறந்த அனுபவமும் இல்லாத சிலருக்கு குரு என்பது பதவியாக அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் உயர்ந்த தவநிலை யோகநிலைகள் கூட சிதிலமடைந்து விடுகின்றன. இப்படிப்பட்ட குருட்டு குருமார்களால் வழி நடத்தப்படுபவர்கள் தனியாக ஜோதியை கண்டதாகவும், பேரொளி தன்னில் பாய்ந்ததாகவும், மௌனத்தை அடைந்து விட்டதாகவும், ஜீவனை சமாதி ஆக்க போவதாகவும், தன்னால் பறக்க கூடிய  ஆற்றல் உள்ளதாகவும், சிவனை கண்டதாவும், கடவுள் தன்னுடன் பேசுவதாகவும். கூடுவிட்டு கூடு பைவதாகவும், இறந்தவர்களைப் பிழைக்க வைப்பதாகவும், மூடவர்களை நடக்க வைப்பதாகவும். பிறவி குருடர்களைப் பார்க்க வைப்பதாகவும் கூறிக்கொண்டு மன நோயால் பாதிப்படைந்து வாழ்கின்றனர்.

வேறு சிலரோ தான் தனிமையில் உணவும் நீரும் இன்றி தவம் மேற்கொள்ளப் போவதாகவும் அதனால் தன்னை அறையிலோ குகையிலோ அடைத்துக்கொண்டு தாழிட்டுக்கொல்கிறார்கள்  (அது அவரவர் நிலை) மக்களை ஆடுகலாக்கி மடமையில் மூழ்கடித்து சில கைக்கூலிகளின் துணையோடு விளம்பரம் செய்து தன்னை மிகச்சிறந்த தவசி என்றும் தன்னை அணுகினால் பாவம் தீரும் என்றும் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி அவர்களை அடிமைகளாக்கி வியாபாரம் செய்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அவர்களின் வழி செல்பவர்களுக்கும் நாம் கேட்கும் முதல் கேள்வி? குகையிலோ அறையிலோ அடைபட்டு இருக்கும் நீங்கள் அவ்வளவு மோசமான குற்றவாளிய ? அவரைத்தான் குரு எனத் தேர்ந்தெடுத்து பின் செல்கிறோம? அன்பர்களே அப்படியானால் நம் மனம் எவ்வளவு மாசடைந்து மடமையில் மூழ்கி உள்ளது. சற்றே சிந்தித்து பாருங்கள்! நாம் யாரையும் குறை கூறவில்லை வேதனையை வெளிபடுத்துகிறோம்.

உன்னதமான தவ வாழ்வு உண்மையை மட்டுமே தெளிந்த ஞானத்தை மட்டுமே போதிக்கிறது. தன்னிலை அறிந்த தவசியின் வார்த்தைகள் தத்துவங்களை தான் இருக்கும். அவன் உயிரின் ஒலி கூட உண்மையை மட்டுமே உரைக்கும், மடமையை வேறருக்கும் மக்களை தன்பால் ஈர்க்கும்.

தன்னிலை எழும் ஆன்ம தாகத்தை அறிய ஆயிரம் கோடி சூரியனின் பிரகாசத்தை அறியலாம் உணரலாம். ஒதுக்கியும் ஒதுங்கியும், ஒளிந்தும், மறைந்தும் வாழ்வது மகான்களின் நிலை அல்ல.

Monday, August 20, 2012

மஹா காளிகாவுடைய பூரண யாக முறை


இந்த யாகம் மிகவும் பழமையான சித்தர்களின் முறைப்படி செய்யப்பட்டது, இந்த யாகத்திற்கு சப்த சத தீ யாகம் என்று பெயர். இந்த யாகம் அசுவமேதாயம் போன்ற யாகங்களுக்கு இணையானது. மகா காளிகாவின் அருளைப் பெற விரும்புபவர்கள் இந்த யாகத்தை பின்பற்றுவது முறையானது. உங்களுக்காக யாகத்தின் புகைப்படங்கள்...


















Friday, August 10, 2012

தவம் என்றால் என்ன ? 

உடலின் உயிர்பொருள் ஒன்றுபட்டு உணர்வும் நினைவும் உண்டாக பல்வேறு கேள்விகளுக்கு பதில்களும் தெரிந்து தெளிவிலும் தெளிவாய்த் தேர்ந்து தன்னை அறிந்து வாழ வாழ்வின் முக்காலங்களையும் உரைப்பது தவம்.

தவம் செய்ய விழைபவர்களின் பல்வேறு செயல்களை நாம் இங்கு குறிப்பிடுவது அவசியம் என கருதுகிறேன். தவம் செய்து தன்னை அறிய விரும்பும் உயர் நிலை நினைவு கொண்டவர்கள் முதலில்ஓர் சிறந்த குருவின் துணைக் கொண்டு யோகா, யாக, ஜப, தியான, நியானம் எனும் பஞ்ச கர்மாக்களை அறிந்து தெரிந்து உணர்ந்து தெளிந்து தேறுதல் வேண்டும்.