குரு வணக்கம்:- தந்தையில் பிறந்து - தாயில் மலர்ந்து - குருவால் உணர்ந்து தெய்வத்தை அறிந்து - தெய்வமாய் மாறுவது, தெளிவான, தெளிவாலே.

Monday, July 30, 2012

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம்

எண்ணம் தெளிவானால்
எல்லாம் தெளிவாகும்


இந்த பதிவில் சர்க்கரை நோய் குறித்தும்  இரத்த அழுத்தம் குறித்தும்  சுவாமிஜி அவர்களின் அரிய தகவல்களையும்  விளக்கங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Tuesday, July 24, 2012

பொன்னை தேடினோம் பயம் வந்தது 
பொருளை தேடினோம் போகம் வந்தது 
புகழை தேடினோம் போதை வந்தது 
தன்னை தேட ஞானம் வந்தது ! 

உடல் இயக்கங்களின் ஆசனங்களின் பங்கு பற்றி இந்த தொடரில் இன்று பார்ப்போம்.

 நாம் முழுமையாக அறிந்து தெளிய உதவும் ஆசனங்களையும் தெரிந்து கொள்வோம்.

பத்மாசனம்
                  பத்மாசனத்தில் அமரும் போது இரு பாதங்களும் மேல் நோக்கி நேராக உச்சி முதல் பாதம் வரை இயங்கும். உடலின் நரம்பு மண்டலங்கள் சீரான இயக்கம் காணும், இதனால் இரத்த ஓட்டம் தங்குதடையின்றி நடைபெறும். உடல் அகத்தில் உள்ள ஒளியை ஒன்று சேர்த்து உணர்வைப் பலமாக உணர்த்த வழிவகை செய்யும், இதனால் தேகத்தில் காந்தி ஏற்படும். மேலும் உள் ஒளி கிளம்ப சுவாதிஷ்டானம் பகுதியில் உள்ள இடகலை, பிங்கலை நரம்பு மண்டலங்களை இயக்கி சுழி முனையில் உள்ள அதிர்வை அதிகரிக்க செய்யும். இதன் காரணமாக சிந்தித்தல் என்கிற நிகழ்வு பலமாகி பிரம்மம், ஸ்ருஷ்டி, வெட்டவெளி, இயக்கங்களை மிக எளிதாக உணர வழிவகை செய்யும். மேலும் உலகில் உயிர்களின் செயல்களையும், இயக்கங்களையும் அறிய உதவும். இந்த ஆசனம் கைகூடி  நீண்ட நேரம் அமர, குருவிடம் முறையாக உபதேசம் பெட்டரவர்கள், கூடு விட்டு கூடு பாய்தல் என்கிற நிலையை எளிதாக அறியலாம் அல்லது அடையலாம்.

Monday, July 9, 2012

எதைநோக்கி இந்த பயணம்...

பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீனிவாச சுவாமிகள்


அஞ்சாதே ! அடக்காதே ! அடங்காதே !!!
 

முற்பிறப்பில் என்ன செய்தாய் இப்பிறப்பில்  சுகம் தேட இப்பிறப்பில் என்ன செய்வாய் மறுபிறப்பில் சொர்க்கம் தேட முன்னகத்தை சிந்தித்து பின்னகத்தை தேடி தன்னகத்தை தான் இழப்பது தகுமா இது தற்குறியின் செயலன்றோ மறுஜென்மம் எனும் மடமையை ஒழிக்க நாம் செல்லும் பாதை.

இந்த புத்தகத்தில் கனவுகளோ, கற்பனைகளோ, கலக்காத நிலையான உணர்வின் தொகுப்பு இந்நூல்.